×

‘ஷேம்…ஷேம்… டவுன்..டவுன்…டவுன்…’ என கோஷம் அமித்ஷா பிரேமில் மணிப்பூர் எதிர்ப்பு 33 முறை மாறிய ‘கேமரா பொஷிசன்’: எல்லா பக்கமும் ரவுண்டு கட்டிய ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள்

மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கு எதிரான மெய்தீஸ் இன மக்கள் வன்முறை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குக்கி இன பழங்குடி பெண்கள் 2 பேரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்று வயலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுத்த அவர்களின் சகோதரன், தந்தை கொல்லப்பட்டனர். இதுதவிர 7 பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு 2 பேர் எரித்தும், 5 பேர் அடித்தும் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறையில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர் படுகாயமடைந்து உள்ளனர். 60,000 பேர் இடம் பெயர்ந்து உள்ளனர். 250 தேவாலயங்கள், 5000 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. கொடூர தாக்குதல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு போலீசார் உடந்தையாக இருந்ததாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. 3 மாதத்துக்கு மேல் நீடிக்கும் வன்முறையை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

இந்த பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன் ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் சென்று நேரடி நிலவரத்தை அறிந்து வந்தனர். அங்குள்ள பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினர். ஆனால், இதுகுறித்து ஒன்றிய அரசு விவாதிக்கவில்லை. இந்த சூழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ‘இந்தியா ஃபார் மணிப்பூர்’, ‘ஷேம் ஷேம்…’ ‘டவுன்…டவுன்..டவுன்’என்று கோஷம் எழுப்பினர்.

அப்போது கையில் பதாகைகள் ஏந்தி அமித்ஷா அருகில் தூக்கி காட்டினர். இதனால் பதறிப்போன நாடாளுமன்ற கேமராமேன்கள், பாஜ எம்பிக்கள் பக்கம் மற்றும் சபாநாயகர் பக்கம் என 33 முறை கேமராவை திருப்பினர். இருப்பினும் விடாத எதிர்க்கட்சிகள் எந்த பக்கம் கேமராவை திருப்பினாலும், மணிப்பூர் பதாகையை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெறும் 2 நிமிடம் மட்டுமே பேசிய அமித்ஷாவின் உரையில் 33 முறை வெவ்வேறு கோணங்களுக்கு கேமராக்கள் மாற்றப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ‘ஷேம்…ஷேம்… டவுன்..டவுன்…டவுன்…’ என கோஷம் அமித்ஷா பிரேமில் மணிப்பூர் எதிர்ப்பு 33 முறை மாறிய ‘கேமரா பொஷிசன்’: எல்லா பக்கமும் ரவுண்டு கட்டிய ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Amit Shah ,India ,Meiteis ,Kukis ,Amit Shah Prem ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நிலநடுக்கம்