×

தொடரை வென்றது இந்தியா

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 200 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. லாரா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச, இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன் குவித்தது. இஷான் 77, கில் 85, சாம்சன் 51, ஹர்திக் 70*, சூரியகுமார் 35 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 35.3 ஓவரில் 151 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதனேஸ் 32, யானிக் 19, ஜோசப் 26, குடகேஷ் 39* ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஷர்துல் 4, முகேஷ் குமார் 3, குல்தீப் 2, உனத்கட் 1 விக்கெட் வீழ்த்தினர். கில் ஆட்ட நாயகன் விருதும், இஷான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி இன்று இரவு நடக்கிறது.

The post தொடரை வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Trinidad ,West Indies ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...