×

பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் வளர்ச்சிக்கு முக்கியமானது: பிரதமர் மோடி

காந்திநகர்: பெண்களுக்கான பொருளாதார அதிகாரமளித்தல் நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி பேசினார். ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக, பெண்கள் அதிகாரமளித்தலுக்கான அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசுகையில்,‘‘ பெண்களுக்கான அதிகாரமளித்தல் வளர்ச்சியை உருவாக்கும். பெண்கள் சாதனைகளை புரிவதற்கான களம் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கான அதிகாரமளித்தல் வளர்ச்சியை உருவாக்கும்.

பெண்களின் வளர்ச்சிக்கு, நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்மு சிறந்த உதாரணமாக திகழ்கிறார். சாதாரண ஏழை பழங்குடியின குடும்பத்தில் பிறந்த முர்மு தற்போது,உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக உள்ளார். உலகின் 2வது பெரிய ராணுவ படையின் தலைவர் பொறுப்பை அவர் வகிக்கிறார். நாட்டில் உள்ள 10 லட்சத்து 40 ஆயிரம் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களில் 46 சதவீதம் பேர் பெண்கள். 80 சதவீத நர்சுகள், பேறுகால பணியாளர்களும் பெண்களாக உள்ளனர். முத்ரா திட்டத்தில் கடன் பெற்ற 70 சதவீத பயனாளிகள் பெண்கள் ஆவர். அதே போல் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்திலும் 80 சதவீத பயனாளிகளாக உள்ளனர்’’ என்றார்.

The post பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் வளர்ச்சிக்கு முக்கியமானது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Gandhinagar ,Modi ,G-20 summit ,PM ,Dinakaran ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...