×

விரைவில் தடையற்ற சுங்க சாவடிகள்: அமைச்சர் வி.கே. சிங் தகவல்

புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய சாலை போக்குவரத்து இணையமைச்சர் வி.கே. சிங் கூறியதாவது புதிய சுங்க சாவடி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தடைகளற்ற சுங்கச் சாவடிகள் விரைவில் அமைக்கப்படுவதன் மூலம், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. தற்போது பயணிகள் சுங்க சாவடியில் பாஸ்டேக் முறையில் பணம் செலுத்தும் போது 47 வினாடிகள் நிற்க வேண்டியுள்ளது. இதனை 30 வினாடிகளாக அதாவது அரை நிமிடமாக மாற்ற அரசு முயற்சித்துள்ளது.

இதன் விளைவாக, டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இந்த சாலையில் வாகனம் நுழைந்த உடன் அவற்றின் பதிவு எண் கேமரா மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படும். அதன்படி, பயணிக்கும் கிலோ மீட்டர் தூரத்துக்கான தொகையை செலுத்த வேண்டும். தற்போது ரூ.265 செலுத்துவதாக கணக்கில் கொண்டால், அது சுங்க விதிக்குட்பட்ட கட்டண அடிப்படையிலானது. தற்போதைய அரசின் செயல்பாடுகளினால் தொலைத்தொடர்பு உள்பட அனைத்து துறைகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post விரைவில் தடையற்ற சுங்க சாவடிகள்: அமைச்சர் வி.கே. சிங் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,V.K. Singh ,New Delhi ,Union Minister of State for Road Transport ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓட்டளித்து விட்டது இந்தியா...