×

7ம் தேதி முதல் தமிழ்நாடு திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: ஓராண்டுக்கு ரூ.10,000 உதவி தொகை

சென்னை: அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 2023-2024ம் கல்வி ஆண்டு முதல் ‘தமிழ்நாடு முதல்வர் திறனாய்வு தேர்வு’ நடத்தப்பட உள்ளது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.10,000 உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திடத்தின் கீழ் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் ஆயிரம் மாணவ, மாணவியர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வி ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம்( மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும்) என இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்பட உள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் உள்ள 9 மற்றும் 10ம் வகுப்பு கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும். முதல் தாளில் கணக்கு பாடத்தில் தொடர்புடைய 60 கேள்விகளும், இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பான கேள்விகள் 60 கேள்விகள் இடம் பெறும். இந்த தேர்வுகள் ஒரே நாளில் 2 கட்டமாக நடக்கும். அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ மாணவியர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.50 சேர்த்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்களை 18ம் தேதிக்குள் சமப்பிக்க வேண்டும்.

The post 7ம் தேதி முதல் தமிழ்நாடு திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: ஓராண்டுக்கு ரூ.10,000 உதவி தொகை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...