×

பேனா நினைவுசின்ன பணிகள் விரைவில் தொடங்கும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் எந்த நேரத்திலும் ஆரம்பிக்கப்படும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். இதுதொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டி: பேனா நினைவு சின்னம் தொடர்பாக மாநில அரசாங்கத்திற்கு சம்பந்தப்பட்ட பல்வேறு துறையின் சார்பில் மறுப்பு சான்றிதழ் பெறப்பட்டு, மாநில அரசாங்கத்தின் குழு பரிந்துரைத்தது. ஒன்றிய அரசாங்கத்தின் கடல்சார் குழு பரிந்துரைத்து, அனுமதித்த பின்புதான் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசை பொறுத்தவரையில் ஒன்றிய மற்றும் மாநில அரசு அனுமதித்துள்ளது. ஆனால் தனிநபர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்.

முதற்கட்ட பணிகள் முடிந்த பின்பு முதல்வரின் அனுமதி பெறப்படும். நெடுஞ்சாலைத்துறையில் கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுத்துவிட்டு பணிகள் முடிக்கப்பட வில்லை. இதனால்தான் கடந்த ஆண்டு, பல மாவட்டங்களில் இருந்த ஒப்பந்ததாரர்களை அழைத்து பருவமழைக்கு முன்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இப்போதும் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு துறையின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முறையாக குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிக்கப்படாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை என்றால் ஒப்பந்ததாரர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்.தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடிமரத்தினை புதுப்பித்தல் பணி ரூ.45 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.

The post பேனா நினைவுசின்ன பணிகள் விரைவில் தொடங்கும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,Chennai ,Public Works ,EV Velu ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...