×

மாநில அரசுகளுக்கு கட்டுப்படும் வகையில் ஆன்லைன் விளையாட்டு சட்டத்தை மாற்ற வேண்டும்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

சென்னை: மாநில அரசுகளுக்கு கட்டுப்படும் வகையில் ஆன்லைன் விளையாட்டு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தார். 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி ஆணையர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த நிலையில் ஒன்றிய அரசு 28 சதவீத வரி விதிக்கும் போது, தமிழ்நாடு தடைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அவர் பேசும்போது கூறியதாவது: தமிழ்நாட்டில் சமீபத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி சட்டங்கள் மற்றும் விதிகளில் திருத்தம் செய்வதற்கான திட்டங்களில் ஆன்லைன் சூதாட்டம் இடம் ெபறுவது அதிருப்தியை அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் அல்லது ஆன்லைன் பந்தயம், பணத்திற்காக ஏதேனும் ஆன்லைன் கேம்களை விளையாடுவது மேலும் குறிப்பிட்ட ஆன்லைன் கேம்களை விளையாடுவதற்கு தமிழ்நாட்டில் தடை இருப்பதால், தமிழ்நாட்டில் அவை தண்டனைக்குரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன. எனவே மாநில சட்டங்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் கட்டுப்பட வேண்டும்.

அதற்கு ஏற்றார்போல் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான குறிப்பிட்ட ஷரத்தை மாற்றியமைக்க வேண்டும். சட்டத்தில் உள்ள ஆன்லைன் பண கேமிங்கின் வரையறையானது, செயல்திறன் அல்லது அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகளை உள்ளடக்கக்கூடாது. எனவே சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தங்களில் உரிய முறையில் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு வலியுறுத்தினார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் பரிந்துரை அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி திருத்தங்களில் தகுந்த மாற்றங்களைச் செய்வதாக ஜிஎஸ்டி கவுன்சில் உறுதியளித்தது.

The post மாநில அரசுகளுக்கு கட்டுப்படும் வகையில் ஆன்லைன் விளையாட்டு சட்டத்தை மாற்ற வேண்டும்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Thangam Tenara ,GST Council ,Chennai ,Tamil Nadu ,Finance Minister Thangam Tennarasu ,Thangam Tennarasu ,Dinakaran ,
× RELATED ‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே...