
- சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம்
- தமிழ்நாடு அரசு
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் மன்னருக்கு சென்றது. இத்தகவலை அறிந்த தீரன் சின்னமலை மைசூர் மன்னருக்கு செல்லும் வரிப்பணத்தை பெற்று ஏழைகளுக்கு வழங்கினார். வரி கொண்டு சென்ற தண்டல்காரர்களிடம் ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை பறித்ததாக சொல்’ என்று கூறினார்.
ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் சின்னமலையை கைது செய்து போலி விசாரணை நடத்தி சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை 9.45 நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
The post சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்பு appeared first on Dinakaran.