×

பெனலி பைக்குகள்

அதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனம், தனது பெனலி டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் ஆகிய மோட்டார் சைக்கிள்களை புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்துள்ளது. சாம்பல் , வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணத்தில் இருந்த இந்த பைக்குகள் இனி கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களிலும் கிடைக்கும். இதற்கு நிறுவன இணையதளத்திலோ அல்லது டீலர்களிடமோ ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

பெனலி டிஆர்கே 502 ஷோரூம் விலையாக சுமார் ரூ.5.85 லட்சம் எனவும், 502 எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.6.35 லட்சம் எனவும் நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது. கி.மீ உச்சவரம்பு இன்றி, 3 ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த பைக்குகளில் 500 சிசி பேரரல் டிவின், டிஓஎச்சி , லிக்விட் கூல்டு , 8 வால்வு இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 47 எச்பி பவரையும் 6,000 ஆர்பிஎம்-ல் 46 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

The post பெனலி பைக்குகள் appeared first on Dinakaran.

Tags : Benali Bikes ,Adhishwar Auto Ride India ,Benali ,Penali Bikes ,Dinakaran ,
× RELATED கீவே எஸ்ஆர் 250