
சென்னை: ஆகஸ்ட் 10 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ள TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் http://tnpscexams.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணிகளில் உள்ள காலியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் நவ.19ம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்1 தேர்வு நடைபெற்றது. இதில் 92 பணியிடங்களுக்காக 1,90,957 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
இதையடுத்து ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு1 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் 10.08.2023 முதல் 13.08.2023 வரை நடைபெறவுள்ளது.
இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் http://tnpscexams.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
The post ஆகஸ்ட் 10 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ள TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.