×

நீலகிரி அருகே பட்டப்பகலில் வீட்டு வாசலில் 2 மணிநேரம் காத்திருந்த யானை: குடியிருப்பு வாசிகள் அச்சம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே பகல் நேரத்தில் வீட்டு வாசலில் இரண்டு மணி நேரமாக நின்ற காட்டுயானையின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக குன்னூர் மற்றும் மஞ்சூர் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக மஞ்சூர் பகுதி என்பது கேரளமாநிலத்தின் எல்லையில் இருப்பதனால் கேரள வனப்பகுதியிலிருந்து வெளிவரும் யானைகள் அங்கு இருக்கக்கூடிய மஞ்சூர் குடியிருப்பு பகுதிகளுக்கும் மற்றும் மலை பகுதியிலும் முஃமிட்டு வருகின்றன.

குறிப்பாக மஞ்சூர் பகுதியிலிருந்து கோவை செல்லக்கூடிய மலைப்பாதையில் அடிக்கடி காலை மற்றும் மாலை நேரங்களில் நின்று வாகன போக்குவரத்துக்கு இடையூ விளைவித்தும் வருகிறது. இந்த யானைகளில் சில யானைகள் பிரிந்து சென்று அங்கு இருக்கக்கூடிய கிராம புறங்களுக்கும் உலா வர தொடங்கியுள்ளது. வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானை அங்குள்ள ஒருவரது வீட்டு வளாகத்திற்குள் புகுந்து வீட்டின் முன்புறம் புற்களை மேய தொடங்கியது.

அதனை கண்டு அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள்ளேயே பதுங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் அவர் வீட்டை சுற்றியும் வீட்டின் முன்பக்கம் இருக்கக்கூடிய புற்களை மேய்ந்தபடி இருந்தது. பின்னர் அங்குள்ளவர்கள் சத்தமிட்டதை தொடர்ந்து அங்கிருந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். யானை தற்போதும் கூட அதே பகுதியில் இருக்க கூடிய பிற குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்து அங்கிருக்கக்கூடிய வாழைமரம், தென்னை, மாமரங்களை சேதப்படுத்தியுள்ளது. யானையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

The post நீலகிரி அருகே பட்டப்பகலில் வீட்டு வாசலில் 2 மணிநேரம் காத்திருந்த யானை: குடியிருப்பு வாசிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Gradhal ,Nilgiri ,Manjur, Nilgiri district ,Nilgiris ,Dinakaran ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...