×

சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயின்ட் ஊற்றியவரை ஒரு மணி நேரத்தில் கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயின்ட் ஊற்றியவரை ஒரு மணி நேரத்தில் போலீஸ் கைது செய்தது. பெவண்ணாரப்பேட்டை, காலிங்கராயன் முதல் தெருவில் உள்ள அண்ணா திருமண மண்டபம் அருகே எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலை கடந்த 1994-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்மகும்பல் எம்.ஜி.ஆர். சிலையின் முகத்தில் சிவப்பு நிற பெயிண்ட்டை ஊற்றி தப்பி சென்று விட்டனர். இன்று அதிகாலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் எம்.ஜி.ஆர்.சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ராயபுரம் பகுதி அ.தி.மு.க. செயலாளர் அரசு புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர்.சிலை துணியால் மூடப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மர்மகும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் லியோ நார்ட் என்பவரை ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாண்டல கூடுதல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

The post சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயின்ட் ஊற்றியவரை ஒரு மணி நேரத்தில் கைது செய்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Vannarapet, Chennai ,CHENNAI ,Vannarappet, Chennai ,Bevannarappet ,Chennai Vannarapet ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு