×

எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி 2023 சென்னையில் நாளை தொடங்கவுள்ள நிலையில், போட்டிகள் நடைபெறவுள்ள எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் இன்று ஆய்வு செய்தார்கள். ரூ.17.33 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் வீரர்கள் அறை, பயிற்சியாளர்கள் அறை, வர்ணனையாளர்கள் அறை, ஊடக அலுவலகம், உணவுக்கூடம், கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, அவை தயார் நிலையில் உள்ளதை அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி கேட்டறிந்தார்.

The post எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Elampur ,Mayor ,Raadhakrishnan ,Hockey Stadium ,Chennai ,Asian Championship Trophy Hockey 2023 ,Ellampur ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...