×

தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் யானை பராமரிப்பாளரான பெள்ளிக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.08.2023) தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள திருமதி வி. பெள்ளி அவர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

முகாம்களில் பராமரித்து வருகின்றனர். உள்ள யானைகளை தனிகவனத்துடன் அவர்கள்பாகன்கள் மற்றும் காவடிகளின் பணிகளை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 91 பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கியுள்ளதோடு, சூழலுக்கியைந்த சமூக இணக்கமான வீடுகள் ரூ.9.10 கோடி செலவில் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடியும், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோழிகமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்ட வருகையின் போது தெப்பக்காடு யானைகள் முகாம் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தற்போது,தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றிவரும் திருமதி. வி. பெள்ளி அவர்கள், அனாதையான யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை கருத்தில் கொண்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் காவடியாக நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிநியமன ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் திருமதி வி. பெள்ளி அவர்களுக்கு வழங்கினார்.

The post தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் யானை பராமரிப்பாளரான பெள்ளிக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Thepakkadam ,Elephants Camp ,Chief Minister ,BC ,G.K. stalin ,Chennai ,Tamil Nadu ,Shr.M. ,b.k. ,Leadership ,Nilgiri ,Forest Department ,Thepatakadam Elephants Camp ,Chief Minister BC. ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...