×

சீனாவை தாக்கிய டோக்சுரி புயல்… வெள்ளப் பாதிப்பால் 20 பேர் பலி, 27 பேர் மாயம்!

பெய்ஜிங்: சீனாவில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழப்பு, மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த வாரம் பிலிப்பைன்ஸை தாக்கி கடும் சேதங்களை ஏற்படுத்திய டோக்சுரி புயல், அடுத்ததாக சீனாவில் ஃபியூஜியான் மாகாணத்தை பதம் பார்த்தது. இந்த ஆண்டின் 5-வது புயலான டோக்சுரியால் சேனா தலைநகர் பெய்ஜிங்கில் பெய்த பலத்த மழையால் அங்கு பல சாலைகள் சேதமடைந்து மரங்கள் வேரோடு சாய்ந்தன. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் பெய்ஜிங்கின் அருகிலுள்ள நகரங்களான ‘Tianjin’ மற்றும் ‘Zhuozhou’ நகரங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.

சாண்டான் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் சாலையில் அதிவேகத்துடன் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் சிக்கிய முதியவரை பேருந்து ஓட்டுநர் துணிச்சலுடன் காப்பாற்றினார். சான்சி மாகாணத்தின் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வெள்ளநீர் வண்டல் மண்ணுடன் கலந்து சேறு நதியாக மாறி ஊருக்குள் புகுந்தது. அங்கு சிக்கி தவித்த 45 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். டோக்சுரி புயலால் சீனாவில் சுமார் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,63,000 பேருக்கு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டோக்சுரி புயலால் இதுவரை 4,903 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 3,500 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 300 பேர் உயிரிழந்தனர் குறிப்பிடத்தக்கது.

The post சீனாவை தாக்கிய டோக்சுரி புயல்… வெள்ளப் பாதிப்பால் 20 பேர் பலி, 27 பேர் மாயம்! appeared first on Dinakaran.

Tags : Typhoon Toxuri ,China ,Beijing ,Toxuri ,
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...