×
Saravana Stores

குன்னூரில் திருமணங்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு பிளாஸ்டிக் பூக்கள் பயன்படுத்த தடை; மலர் சாகுபடியாளர்கள் வரவேற்பு..!!

நீலகிரி: குன்னூரில் பிளாஸ்டிக் பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மலர் உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு பிளாஸ்டிக் பூக்கள் பயன்படுத்த தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு நீலகிரி மலர் சாகுபடியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு மாற்றாக மலர் சாகுபடி ஊக்குவிக்கப்பட்டது. மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மலர்களுக்கு பதில் பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்துவது, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் மலர் சாகுபடி தொழில் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் நகர மன்ற கூட்டத்தில் திருமணம் மற்றும் விழா காலங்களில் பிளாஸ்டிக் பூக்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர் மன்ற கூட்டத்தின் தீர்மானத்தை மலர் சாகுபடியாளர்கள் வரவேற்றுள்ளனர். தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க குன்னூர் நகர் மன்றம் போல பிற உள்ளாட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்ற மலர் சாகுபடியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post குன்னூரில் திருமணங்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு பிளாஸ்டிக் பூக்கள் பயன்படுத்த தடை; மலர் சாகுபடியாளர்கள் வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Gunnur ,Nilgiris ,Kunnur ,Nilgiri District ,Gunnur Municipal Meeting ,Dinakaran ,
× RELATED குன்னூரில் பலத்த மழை காரணமாக...