×

பெண்களுக்கு பாலியல் தொல்லை அரசு அலுவலகங்களில் 15 நாட்களில் புகார் குழு

நெல்லை, ஆக. 2: நெல்லை மாவட்டத்தில் அனைத்து துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் “புகார் குழு” உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து விவரங்களை 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் அனைத்து துறை நிறுவனங்களில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து, பாதுகாக்கும், சட்டம்-2013(தடுப்பு, விலக்கு மற்றும் தீர்வு) சட்டத்தை, மாநில அளவில், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத் துறை செயல்படுத்தி வருகிறது. இச்சட்டத்தின் படி பணிபுரியும் இடங்களில் பெண்களை பாலியல் சீண்டல்களிலிருந்து பாதுகாக்க 10க்கும் மேற்பட்ட பணியாளர் பணிபுரியும் அனைத்து அரசு, தனியார் பணியிடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள குழுக்களை அமைத்திட வேண்டும்.

அனைத்து பணிபுரியும் மகளிரும் தங்கள் பணியிடங்களில் ஏற்படும் வன்கொடுமைகள் குறித்து உள்ளக புகார் குழுவிற்கு புகார் அளித்து தீர்வு காணலாம். மேலும் நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பணியிடங்கள் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அனைத்திலும் பின்வருமாறு உள்ளக குழுவினை உருவாக்கி அதன் உறுப்பினர் விவரங்களை 15 நாட்களுக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வஉசி மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டம் – 627002 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து, பாதுகாக்கும், சட்டம்-2013ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளக புகார் குழு உறுப்பினர்கள் நியமனம் பணிபுரியும் இடத்தில் மூத்த பெண் பணியாளரை தலைவராக நியமனம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் பணிபுரியும் அலுவலகம், பிற துறைகள், பிற கிளைகள், பிற பணியிடங்களில் இருந்து நியமிக்கலாம். பெண்கள் சார்ந்த பிரச்னைகளை முன்னெடுத்து அவற்றை களைந்திட விருப்பம் உடையவர் அல்லது சமூகப் பணிகளில் அனுபவம் அல்லது சட்ட அறிவு பெற்ற இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இரண்டு நபர்களில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். குழுவில் ஒருவர் சட்ட அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். ஒருவர் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மையினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

The post பெண்களுக்கு பாலியல் தொல்லை அரசு அலுவலகங்களில் 15 நாட்களில் புகார் குழு appeared first on Dinakaran.

Tags : Nadalle district ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...