×

நெல்லை மாவட்டத்தில் குண்டாசில் 4 பேர் கைது

நெல்லை, ஆக.2: நெல்லை மாவட்டத்தில் கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் உன்னியூர்கோணம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் பிரவீன் (25), சசி மகன் சரத்(25). இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதிகளில் ெகாள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரவீனும், சரத்தையும் ஒரு வழக்கில் மூன்றடைப்பு போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

இதுபோல் நெல்லை மாவட்டம் மேல பத்தமடை மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் பாஸ்கர்(25), கீழமுன்னீர்பள்ளம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அருண்பாண்டியன் (22) ஆகியோரை அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில் சேரன்மகாதேவி போலீசார் கைது செய்தனர். இவர்கள் வேறு ஒரு வழக்கில் கைதாகி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டி நெல்லை எஸ்பி சிலம்பரசன், இன்ஸ்பெக்டர்கள் நாங்குநேரி ஆதம்அலி, சேரன்மகாதேவி ஷேக் அப்துல்காதர் ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனுக்கு பரிந்துரைத்தனர். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று பாளை மத்திய சிறையில் உள்ள பிரவீன், சரத், பாஸ்கர், அருண்பாண்டியன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வற்கான உத்தரவை வழங்கினர்.

The post நெல்லை மாவட்டத்தில் குண்டாசில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kundasil ,Nellai district ,Nellai ,Dinakaran ,
× RELATED சேரன்மகாதேவியில் குண்டாசில் வாலிபர் கைது