×

நாசரேத் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா பெற்றோர், ஆசிரியருக்கு கீழ்படிந்தால் உயர்ந்த பதவிகளை அடையலாம் மாணவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரை

நாசரேத், ஆக. 2: பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் கீழ்படிந்து நடந்தால் உயர்ந்த பதவிகளை அடையலாம் என்று மாணவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருச்சந்திரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பஞ். தலைவர் பிரம்மசக்தி, நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலாரவி, பள்ளி தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் ஜெயசீலன் சேகர் வரவேற்றார். விழாவில் மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 160 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டையும் தனது இரு கண்களாக பாவித்து மக்களுக்கு பணி செய்து வருகிறார். கல்வி ஒருவருக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் அளிக்கிறது. தமிழக முதல்வர் கல்வி கற்றலில் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்காக அக்கறையுடன் செயல்பட்டு திட்டங்களை வகுத்து வருகிறார். கல்விக்காக அதிக நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி மாணவர்கள் கண்டிப்பாக கல்வி பயில வேண்டும் என்பதற்காக 5 கிலோ மீட்டருக்குள் ஒரு பள்ளியை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் கலைஞர், சத்துணவு திட்டத்தில் சத்தான உணவு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு முட்டைகளும் வழங்கினார். மேலும் மாணவ- மாணவிகள் தாங்கள் கல்வி பயிலும்போது சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக 14 வகையான திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். தற்போது மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு வருவதற்காக இலவச சைக்கிள்களும் வழங்கப்படுகிறது.
நாசரேத் கல்விக்கும், விளையாட்டிற்கும் ஒரு முன்மாதிரியான நகரமாக விளங்குகிறது. மாணவர்கள் பிற்காலத்தில் பல்வேறு பதவிகளை வகிக்க இப்பொழுதே முடிவெடுத்து நன்றாக படிக்க வேண்டும்.
மாணவர்களாகிய நீங்கள் உங்களது பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் கீழ்படிந்து அவர்கள் சொல்படி நடக்க வேண்டும். அப்போதுதான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும், என்றார்.

இதில் திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தூத்துக்குடி ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், நாசரேத் நகர செயலாளர் ஜமீன்சாலமோன், துணை செயலாளர் ஜேம்ஸ், அவைத்தலைவர் கருத்தையா, கருங்குளம் யூனியன் சேர்மன் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் பேரின்பராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவிசெல்வகுமார், நாசரேத் பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், மாவட்ட பிரதிநிதிகள் சுடலைமுத்து, அலெக்ஸ்புரூட்டோ, அன்பு, சாமுவேல், நகர தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், வழக்கறிஞர் கிருபாகரன், கவுன்சிலர் அதிசயமணி, பிச்சுவிளை சுதாகர், அருள்ராஜ், மாரிமுத்து, செல்லத்துரை, தேவதாசன், ஹாரிஸ் ரவி, ராமச்சந்திரன், சிலாக்கிமணி, ஏகோவாகான், சேகர் மனோகரன், உடையார், மாற்கு ஜான்சன், சரவணன், பால்ராஜ், அகஸ்டின், மாற்கு, ஜூலியட், கஸ்தூரி, ஜெமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் கென்னடி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post நாசரேத் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா பெற்றோர், ஆசிரியருக்கு கீழ்படிந்தால் உயர்ந்த பதவிகளை அடையலாம் மாணவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Nazareth ,School ,Minister ,Anita Radhakrishnan ,
× RELATED நாசரேத் நூலகத்தில் கவியரங்க நிகழ்ச்சி