×

மின்சாரம் தாக்கி வயர்மேன் பலி

 

சின்னமனூர், ஆக. 2: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி நடுத்தெருவில் குடியிருப்பவர் பாலுச்சாமி மகன் ராஜபாண்டி (42). தனியார் வயர்மேன். இவர் நேற்று மாலை 6 மணிக்கு இயற்கை உபாதைக்காக சீலையம்பட்டி கோட்டூர் சாலையில் உள்ள காளியம்மன் கோயில் அருகே உள்ள தோட்ட சாலைக்கு சென்றார். அப்போது ஒரு டிரான்ஸ்பார்மர் கீழே அமர்ந்து உபாதையை முடித்து விட்டு எழுந்தபோது,டிரான்ஸ்பார்மர் கம்பியை பிடித்துள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ராஜபாண்டி பரிதாபமாக இறந்து விட்டார். தகவலறிந்து வந்த சின்னமனூர் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.இறந்த வயர்மேன் ராஜபாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

The post மின்சாரம் தாக்கி வயர்மேன் பலி appeared first on Dinakaran.

Tags : Wireman ,Chinnamanur ,Rajapandi ,Seelaiyambatti Nadutheru ,
× RELATED உயரழுத்த மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்