- கோவிந்தா கோசம்
- ஆதி புரோத்சவம்
- சுந்தராஜ பெருமாள் கோயில்
- பரமக்குடி
- ஆதி பிரமோத்சவ ஊர்வலம்
- பரமக்குடி சுந்த்ராஜ பெருமாள் கோயில்
- கோவிந்த கோஷா
- ஆடி
பரமக்குடி, ஆக.2: பரமக்குடி சுந்தtரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரமோற்சவ தேரோட்டம் பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா பத்து நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜூலை 24 அன்று காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் சுந்தரராஜ பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் அன்ன வாகனம், சேஷ, கருடன், அனுமன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று காலை 11 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜ பெருமாள் அலங்காரமாகி திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் தேரினை கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து, ரத வீதிகளில் பெருமாள் அருள் பாலித்தார். அப்போது நீர் மோர் பந்தல்களை அமைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் மதியம் 2 மணிக்கு கோயிலை அடைந்த பெருமாளுக்கு பக்தர்கள் நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன், டிரசரர் பாலமுருகன், டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் செய்திருந்தனர்.
The post சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரமோற்சவ விழாவில் தேரோட்டம் கோலாகலம்: கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.