×

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் திருவிழா வேப்பிலை கொண்டு கறி சமைப்பு: மேலூர் அருகே விநோதம்

 

மேலூர், ஆக. 2: மேலூர் அருகே வெறும் வேப்பிலையை நீருடன் கலந்து கறி சமைத்து பறிமாறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோத ஆடி படையல் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. மேலூர் அருகே சுந்தரராஜபுரம், வீரசூடாமணிபட்டி, கச்சிராயன்பட்டி எனும் 3 கிராம மக்கள் சேர்ந்து அங்குள்ள சின்ன கண்மாய் கரையில் உள்ள ஐந்துமுனி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி படையல் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதில் பக்தர்கள் நேர்த்தி கடனாக ஆடுகள், சேவல்களை கொண்டு வந்து கொடுப்பார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி படையல் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்களால் நேர்த்திகடனாக செலுத்தப்பட்ட 100 ஆட்டு கிடா, 1000 சேவல்கள் பலியிடப்பட்டது.

பின்னர் அந்த கறிகளை மண்பானையில் போட்டு, அதில் நீர் ஊற்றி உடன் வெறும் வேப்பிலைகளையும் சேர்த்து கோயில் முன்பு சமைக்கப்பட்டது. இத்துடன் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக இஸ்லாமியர்களை அழைத்து பிரார்த்தனை செய்து சர்க்கரை கொடுத்தும் விழா கொண்டப்பட்டது. இதில் கறியுடன் நீரை சேர்த்து வெறும் வேப்பிலை மட்டுமே சேர்த்து சமைத்தாலும் அதன் சுவை மாறாமல், இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். இறைவனின் சக்தியால் கசப்பு தன்மை ஏதுமின்றி, உரிய சுவையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விழாவில் முழுமையாக ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இப்படி படையல் போடுவதால் மழை பொழிவும், நோய் நொடியின்றியும் மக்கள் வாழ்வார்கள் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

The post ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் திருவிழா வேப்பிலை கொண்டு கறி சமைப்பு: மேலூர் அருகே விநோதம் appeared first on Dinakaran.

Tags : Aadi Padayal festival ,
× RELATED மீன் பிடிக்க சென்றவர் கண்மாயில் மூழ்கி பலி