- பட்டிவீரன்பட்டி நகராட்சி மன்றக் கூட்டம்
- ஜனாதிபதி
- சியாமளா
- பாடிவீரான்பட்டி ஊராட்சி
- துணை ஜனாதிபதி
- பட்டதாரி நகராட்சி மன்றக் கூட்டம்
- தின மலர்
பட்டிவீரன்பட்டி, ஆக. 2: பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் சியாமளா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்பனாதேவி அருண்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் உமாசுந்தரி வரவேற்றார். இக்கூட்டத்தில் அண்ணாநகரில் கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை, 14வது வார்டு வத்தலக்குண்டு சாலை முதல் மெயின் தெருவில் ரூ.29 லட்சத்தில் தார்சாலை அமைத்தல், 14வது வார்டு தென்றல் நகர் 1 மற்றும் 2 வது மெயின் தெருகளில் ரூ.39 லட்சத்தில் தார்சாலை சீர்செய்தல், 1 வது வார்டு செட்டியார் தெரு எதிர்புறம் முதல் பேரூராட்சி அலுவலகம் வரை ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் அமைத்தல் மற்றும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவருக்கு மதிப்பூதியம் போன்ற திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
The post பட்டிவீரன்பட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் appeared first on Dinakaran.