×

மேயர், துணை மேயர் துவக்கி வைத்தனர் திண்டுக்கல்லில் புதிய மின் மாற்றிகள்

திண்டுக்கல், ஆக. 2: திண்டுக்கல்லில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றிகளை மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா நேற்று துவக்கி வைத்தனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக அடிக்கடி குறைந்த மின்னழுத்தம், அதிக மின் பளு குறைபாடுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 15 இடங்களில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றி அமைக்க அரசு உத்தரவிட்டது.

முதல் கட்டமாக திண்டுக்கல் பழநி ரோட்டில் 2 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. இதற்கான துவக்க விழா நேற்று நடந்தது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டு மின் மாற்றிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் வடக்கு செயற்பொறியாளர் முத்துக்குமார், திண்டுக்கல் நகர் உதவி செயற் பொறியாளர் கார்த்திக், உதவி மின் பொறியாளர் மதிவாணன் ,மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஜான் பீட்டர் மற்றும் மின்வாரிய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மேயர், துணை மேயர் துவக்கி வைத்தனர் திண்டுக்கல்லில் புதிய மின் மாற்றிகள் appeared first on Dinakaran.

Tags : Mayor ,Deputy Mayor ,Dindigul ,Ilmati ,Rajappa ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...