×

கறம்பக்குடி அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ

கறம்பக்குடி,ஆக.2: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாண்டான் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பிலோமின் ராஜ். விவசாயி. இவருக்கு சொந்தமாக தைல மரக்காடு உள்ளது. நேற்று பகல் இவரது தைல மரக்காட்டில் திடீரென்று தீ எரிந்தது. இது குறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

The post கறம்பக்குடி அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Philomin Raj ,Vandan Inn ,Pudukottai ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடியில் அனுமதியின்றி...