×

திருமயம் அருகே 1400 ரேஷன் அரிசி வேனில் கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது

திருமயம்,ஆக.2: திருமயம் அருகே சுமார் 1400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி மினி வேனில் கடத்திய பெண் உட்பட இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். தமிழ்நாடு சிவில் சப்ளை சிஐடி காமினி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொதுவிநியோக திட்ட ரேஷன் அரிசி, மண்ணென்ணெய், கலப்பட டீசல் கடத்துதல், பதுக்கவது சம்மந்தமாக கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்று வழங்கிய உத்தரவின்பேரில் திருச்சி மண்டல எஸ்பி சுஜதா மேற்பார்வையில் தஞ்சாவூர் சரக டிஎஸ்பி சரவணன் தலைமையில் புதுகோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலையில் உள்ள கொசப்பட்டி பகுதியில் வாகன தணிக்கயில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் சட்ட விரோதமாக சுமார் 1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ரேஷன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வேனை ஓட்டி வந்த திருமயம் வாரியபட்டியைச் சேர்ந்த தைனிஸ் (65), திருமயம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதம் (41) ஆகியோர் மீது குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

The post திருமயம் அருகே 1400 ரேஷன் அரிசி வேனில் கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumayam ,
× RELATED திருமயம் ஊராட்சியில் 11.16 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட பணிகள்