×

சோகத்தூர் ஏரியில் விஷமுள் செடிகளை அகற்ற எதிர்பார்ப்பு

தர்மபுரி, ஆக 2: பருவ மழைக்கு முன்பு சோகத்தூர் ஏரியை ஆக்கிரமித்துள்ள விஷமுள்செடிகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், மதிகோன்பாளையம், ராமக்காள், பைசுஅள்ளி ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, இண்டூர் ஏரி, லளிகம் ஏரி, செட்டிக்கரை, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி ஏரி உள்பட 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் அனைத்துமே குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. இதில் சில ஏரிகள் வறண்டுள்ளன. இதுபோல், தர்மபுரி நகரம் அருகே சோகத்தூர் ஏரியிலும் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது.

சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரிக்கு பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பெய்த மழையினால் சின்னாறு அணையில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் சோகத்தூர் ஏரிக்கு வந்தது. இந்த ஏரி 15 ஆண்டிற்கு பிறகு ஏரி நிரம்பி உபரி நீர் வெளியே சென்றது. இந்நிலையில் இந்த ஏரிக்குள் கருவேல மரங்கள் விஷமுள்செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரி முட்செடிகளை அகற்ற வேண்டும். இதன் மூலம் பருவமழையின் மழை நீரை சேமிக்க முடியும். மழைநீர் ஏரியில் சேமிப்பால், தர்மபுரி நகர எல்லையில் நீர்மட்டம் உயரும், சோகத்தூர் பகுதியில் ஆயிரக்கனக்கான ஏக்கர் விவசாயமும் பாசன வசதி பெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post சோகத்தூர் ஏரியில் விஷமுள் செடிகளை அகற்ற எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sogathur lake ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது