×

மஞ்சமேடு ஆற்றங்கரையில் குப்ைப கழிவுகள் அகற்றம்

போச்சம்பள்ளி, ஆக.2: கிருஷ்ணகிரி கேஆர்பி அணை பகுதியில் இருந்து தென்பெண்ணை ஆற்று வழியாக, தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், பேரூஅள்ளி, அரசம்பட்டி, மஞ்சமேடு வழியாக ஊத்தங்கரை, பாம்பாறுக்கு தண்ணீர் செல்கிறது. போச்சம்பள்ளியிலிருந்து தர்மபுரி செல்லும் மெயின் சாலையில், மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொது மக்கள் டெம்போ, லாரி, கார், டுவீலர்களில் வந்து, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி செல்வர். இதனால் இந்த ஆற்றுக்கு பொன்னியாறு என்று பெயர் உள்ளது. இதேபோல், வரும் ஆடி 18 பண்டிகை நாட்களில், இந்த ஆற்றுக்கு புனிதா நீராட சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொது மக்கள் வருவார்கள். அவர்கள் புனித நீராடி அருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் ஆற்றங்கரையோர பகுதியில் மீன் கழிவுகள், குப்பையை கொட்டியுள்ளனர். இதனால் ஆற்று பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வந்தது. இதனால் ஆற்றுக்கு புனித நீராட வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு குறைந்து வந்தது. எனவே இதனை அகற்றி, தூய்மை படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்த செய்தி கடந்த வாரம் தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக ஆற்றில் இருந்த குப்பைகள், மீன் கழிவுகள் பொக்லைன் மூலம் நேற்று அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மஞ்சமேடு ஆற்றங்கரையில் குப்ைப கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Manjamedu river bank ,Bochambally ,Krishnagiri KRP dam ,Tenpenna River ,Kaveripatnam ,Nedungal ,Manjamedu River ,Dinakaran ,
× RELATED நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை