×

2 பைக்குகள் மீது கார் மோதல்

திருக்கோவிலூர், ஆக. 2: திருக்கோவிலூர் அடுத்த ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (30). இவர் தனது பைக்கில் தனது நண்பரான குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜாவை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு சொந்த வேலை நிமித்தமாக மணலூர்பேட்டை பகுதியிலிருந்து தியாகதுருகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் சரவணன், ராஜா ஆகியோர் காயம் அடைந்தனர். இதுபோன்று இவர்களுக்கு பின்னால் மற்றொரு பைக்கில் வந்த கொடுக்கப்பட்டு பகுதியை சேர்ந்த நவீன் (22) மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகியோர் மீதும் கார் மோதியதில் அவர்களும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணன் மனைவி ரஞ்சிதா மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 பைக்குகள் மீது கார் மோதல் appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Saravanan ,Odiyathur village ,Tirukovilur ,Dinakaran ,
× RELATED குண்டர் சட்டத்தில் முதியவர் கைது