- ஏலமாத்தம்மன் கோயில் திமிதி விழா
- Uthukottai
- Uthukkottai
- சூளைமேனி ஸ்ரீ இலாமாத்தம்மன் கோயில்
- ஊத்துக்கோட்டை
- ஏலமாத்தம்மன்
- கோவில்
- ஊத்துக்கோட்டை தீமிதி திருவிழா
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி ஸ்ரீ எலமாத்தம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் 286 பேர் தீமிதித்தனர். ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி கிராமத்தில் ஸ்ரீ எலமாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் 8ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 21ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் காலை 7 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மன் வீதியுலா வந்தார். இதைத் தொடர்ந்து தீச்சட்டி ஏந்தி வருதல், தாய் வீட்டு சீதனம் வழங்குதல், பெண் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தும் நிகழ்ச்சி, அடித்தண்டம் போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் 28ந் தேதி சிவன் கோயிலிலிருந்து பால் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் , திரு விளக்கு பூஜையும் நடந்தது. 29ந் தேதி சறுக்கு மரம் ஏறும் விளையாட்டு, பச்சையம்மன் கோயிலிலிருந்து கங்கை திரட்டி அக்னி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன் தினம் தீமிதி திருவிழா நடந்தது. இதில் காப்பு கட்டி மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் 286 பேர் தீ மிதித்தனர். நேற்று அம்மனுக்கு அபிஷேகமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது . இவ்விழாவிற்கு சூளைமேனி, பெரம்பூர், லட்சிவாக்கம், தண்டலம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post ஊத்துக்கோட்டை அருகே எலமாத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா: 286 பக்தர்கள் தீ மிதித்தனர் appeared first on Dinakaran.