×

கள்ளச்சாராயம், போலி மதுபானம் தயாரிப்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்க செல்போன் எண்கள்: கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல், மெத்தனால் எத்தனால், ஸ்பிரிட் கடத்தல், கள்ளத்தனமாக விற்பனை செய்தல் போன்ற, குற்றங்கள் பற்றிய தகவல்களை வாய்ஸ் மெசேஜ், இருப்பிடம் மற்றும் அனுப்பி வைக்க, திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிக்கு 6379904848 என்ற எண்ணிலும், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிக்கு 9345455400 என்ற வாட்ஸ் ஆப் எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

The post கள்ளச்சாராயம், போலி மதுபானம் தயாரிப்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்க செல்போன் எண்கள்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,District ,Collector ,Alby John Varghese ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்