×

காவல் துறை சிறப்புத் தணிக்கையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 258 ரவுடிகள் கைது: ஆணையர் சங்கர் தகவல்

ஆவடி: ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட பொது மக்களின் நலன் கருதி ஆவடி காவல் ஆணையர் சங்கர் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டி சிறப்புத் தணிக்கை நடத்துமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆவடி காவல் இணை ஆணையாளர் விஜயகுமார் மேற்பார்வையில் இரு மாவட்ட செங்குன்றம் ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன், ஆவடி ஆணையர் பாஸ்கர் தலைமையில் ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 258 ரவுடிகளை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், முன் வழக்கு மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 50 ரவுடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 208 ரவுடிகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரவும், குற்ற விகிதத்தை குறைக்கவும் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் (செக்யூரிட்டி ஆக்ட்) கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் வெள்ளவேடு காவல் நிலைய ரவுடியான மேலமணல்மேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (33), எண்ணூர் காவல் நிலைய ரவுடியான எண்ணூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (எ) பாம் ராஜேஷ் (27), மேலும் 103 பேர் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரவுடிகளுக்கு எதிரான தொடர் கைது நடவடிக்கை தொடரும் என்றும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் ரவுடிகள் மீது தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் தெரிவித்தார்.

The post காவல் துறை சிறப்புத் தணிக்கையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 258 ரவுடிகள் கைது: ஆணையர் சங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Shankar ,Aavadi ,Aavadi Police Commission ,Aavadi Police ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!