×

ஊர் காவல் படை வீரர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர், பாதிரிவேடு காவல் நிலையத்தில் சில ஆண்டுகளாக ஊர்காவல் படை போலீஸ்காரராக பணியாற்றி வருகின்றார். கடந்த மாதம் குடும்பத்துடன் வங்கிக்கு சென்று வீடு திரும்பும்போது. வீட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம், உண்டியல் பணம் ₹3000 , வெள்ளி 200 கிராம் பொருட்களை கொள்ளை அடித்து சென்று விட்டனர். இது குறித்து ஸ்ரீதர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். டி.எஸ்.பி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையான தனிப்படை போலீசார் கொள்ளையார்களை தேடினர்.

இந்நிலையில், சிறுபுழல்பேட்டை பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தியாகும் தொழிற்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஒரே பைக்கில் 3 பேர் சென்றதும். பின்னர் சப் – இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆங்காங்கே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சென்றபோது, சென்னை செங்குன்றம் வரை சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணப்பட்டது. இதன் பின்பு நேற்று காலை 11 மணியளவில் செங்குன்றம் பகுதியில் சுமார் 5 பேரை போலீசார் கையும் காலமாக பிடித்து சிப்காட் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

விசாரணையில் செங்குன்றம் எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர்( எ) அப்பு (35), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னையா(எ) தேவர்(27), ராஜேந்திரன்(36) அருண்(எ) பூச்சி இருளப்பன் (22) வினோத் கண்ணன் (38) என தெரியவந்தது. மேற்கண்ட அனைத்து குற்றவாளிகள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சிவகங்கை மாவட்டத்தில் இருப்பதாகவும் அவர்கள், ஒரு மாதங்களுக்கு முன்பு தான் புழல் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கை செலவுக்காக சிறுபுழல்பேட்டை உள்ள ஊர்க்காவல் படை போலீசார் வீட்டில் நகை கொள்ளை அடித்து கொண்டு செங்குன்றம் எடப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள நகை கடைகளில் அடமானம் வைத்ததும் தெரியவந்தது. மேற்கண்ட, குற்றவாளிகளிடமிருந்து சுமார் 15 சவரன் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து சிப்காட் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ஊர் காவல் படை வீரர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Sridhar ,Sirupuzalpet ,Patirivedu ,station ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் பயிற்சி வகுப்பு