×

பெருவாயில் ஊராட்சியில் பெரிய குளத்தை தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் ஊராட்சியில் 1000 மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஏழை, எளிய மக்கள் தங்களுடைய விலை நிலங்களை உழுது நெல், வேர்க்கடலை, பச்சைபயிறு, காராமணி, எள்ளு ஆகிய பயிர்களை காலத்துக்கு ஏற்றார் போல் விவசாயம் செய்கின்றனர். விவசாயம் செய்வதற்கு ஆண்டுதோறும் பருவ மழையில் பெய்யும் பொழுது நாட்டு நட்டு பயிர் செய்வதும் மற்ற காலங்களில் ஏரி, குளம் குட்டைகளில் இருக்கும் மழைநீரை வைத்து விவசாயம் செய்வது வழக்கம். இந்நிலையில், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட நயனகுப்பம் பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் உள்ளது.

இதை மையமாகக்கொண்டு பெருவாயில், நயனங்குப்பம், கிழ்முதலம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கால்வாய் மூலமாக மழைநீரைவைத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்து வந்தனர். மேலும், கால் நடைகளும் இங்கு வந்துதான் தாகத்தை தீர்த்துக் கொள்ளூம். ஆனால், சில ஆண்டுகளாக மேற்கண்ட பெரியகுளம் ஆங்காங்கே ஆகாயத்தாமரையும், கரைகள் சேதம் அடைந்தும் முட்புதர்களாக மண்டி உள்ளது. இதனால் கடந்த காலங்களில் மழைநீர் சேமிக்க முடியாமல், மழை பெய்யும் பொழுது மழைநீரானது கால்வாய் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஓரமாக சென்று விடுவதும் வழக்கமாகி உள்ளது.

இது சம்பந்தமாக ஏற்கனவே இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நயனங்குப்பத்தில் உள்ள பெரிய குளத்தை ஆழப்படுத்தி கரைகளை வலுப்படுத்தும் கால்வாய்களை தூர்வாறவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றிய விவசாயிகளிடம் கேட்டதற்கு இந்த குளத்தை தூர்வார சுமார் ₹12 லட்சம் நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இனி வருவது தொடர்ந்து மழைக் காலங்களாக இருப்பதால் உடனடியாக, பெரிய குளத்தை தூர்வார வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெருவாயில் ஊராட்சியில் பெரிய குளத்தை தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Peruvail Panchayat ,Kummidipoondi ,Peruvail ,Dinakaran ,
× RELATED எளாவூர் சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு