×

கொரட்டூர் கிராமத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: கொட்டூர் கிராமத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சோதனை, விழிப்புணர்வு நிகழ்ச்சிக நடத்தி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலீசார தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, கொரட்டூர் ஊராட்சியில் புகையிலைப் பற்றிய விழிப்புணர்வு பேரணி நேற்றுமுன்தினம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் இ.கந்தபாபு தலைமை தாங்கினார்.  பேரணியில் திருநின்றவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் எஸ்.கீதா, சுகாதார ஆய்வாளர் என்.ஏ.லோகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், துணைத் தலைவர் பி.ரம்யா பாண்டியன், சுரேஷ், வார்டு உறுப்பினர்கள் ஜி.காமாட்சி கோவிந்தராஜ், கட்டதொட்டி எம்.குணசேகரன், கல்பனா தேவராஜ், யமுனாதேவி பாரதி, ராஜேஷ், கிளார்க் சுரேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post கொரட்டூர் கிராமத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : awareness rally ,Korattur ,Tiruvallur ,Kottoor village ,Drug awareness rally ,Koratur village ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி