×

மேல்வளையமாதேவி கிராமத்துக்கு செல்ல கம்யூ.எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மேல்வளையமாதேவி கிராமத்துக்கு செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களுக்கு போலீசார் அனுமதி தரவில்லை. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மேல்வளையமாதேவி கிராமத்தில் நேற்று 6வது நாளாக என்எல்சி நிறுவனம் சார்பில் புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிட்டு விவசாயிகளை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக்கள் நாகை மாலி, கந்தர்வகோட்டை சின்னதுரை ஆகியோர் நேற்று வந்தனர். எம்எல்ஏக்கள் இருவரையும் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிருப்தியடைந்த எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சமாதானப்படுத்தினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post மேல்வளையமாதேவி கிராமத்துக்கு செல்ல கம்யூ.எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Kamu ,Elvayamayamadevi ,MLA ,Chetyathopu ,Marxist ,Maelvagyamadevi ,Cuddalore District Chettiyathopp ,Mavavaiyamadevi ,Dinakaran ,
× RELATED மக்களின் அதிகாரத்தை ஆளுநர் ஒரு...