திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் முத்தழகுபட்டியில் 350 ஆண்டு பழமையான புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மாபெரும் அன்னதானம் நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய நடைபெற்றது. முன்னதாக கூட்டுத்திருப்பலி நடைபெற்று புனிதருக்கு காணிக்கை பவனி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய செபஸ்தியாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக 1,000 ஆடுகள், 3,000 கோழிகள், 3 டன் காய்கறிகள், 4 டன் அரிசி ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினர். இவற்றைக் கொண்டு நேற்று இரவு அசைவ விருந்து தயார் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் காத்திருந்து கலந்து கொண்டனர். இன்று தேர்பவனியுடன் திருவிழா நிறைவடைகிறது.
The post 1,000 ஆடுகள், 3,000 கோழிகளை பலியிட்டு விருந்து appeared first on Dinakaran.