×

வரத்து குறைவால் கோயம்பேட்டில் உச்சம் தொட்ட தக்காளி விலை: 1 கிலோ பெரிய தக்காளி ரூ.200; பொடி தக்காளி ரூ.120க்கு விற்பனை

சென்னை: கோயம்பேட்டில் தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் பொடி தக்காளிகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு 30 வாகனங்களில் 400 டன் தக்காளி வந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.150, பொடி தக்காளி ரூ.110 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 25 வாகனங்களில் 300 டன் தக்காளி மட்டுமே வந்தது. எனவே, ஒரு கிலோ பெரிய தக்காளி ரூ.170, பொடி தக்காளி ரூ.130க்கும் விற்பனையானது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்று காலை 25 வாகனங்களில் 300 டன் தக்காளி வந்தது.

காய்கனி மார்ககெட்டிற்கு குறைந்த அளவே தக்காளி வந்ததால், ஒரு கிலோ பெரிய தக்காளி திடீரென ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த சென்னை புறநகர் சில்லறை வியாபாரிகள் பெரிய தக்காளி வாங்கி சென்று தங்கள் கடைகளில் விற்பதை கைவிட்டனர். அதற்கு பதிலாக சின்ன தக்காளியை வாங்க ஆர்வம் காட்டினர். அதாவது, ஒரு கிலோ ரூ.120க்கு விற்ற பொடி தக்காளியை பெண்கள் மற்றும் சென்னை புறநகர் சில்லரை வியாபாரிகள் நேற்று காலை போட்டிபோட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். பொடி தக்காளி விற்பனை அமோகமாக நடைப்பெற்றதால், கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ பொடி தக்காளி ரூ.190 வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முழுவதும் மார்க்கெட்டில் பெரிய தக்காளியின் விலை ரூ.200க்கு கீழ் விற்பனையானது. இதையும் வர்த்தகர்கள், பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Tags : Coimbatore ,CHENNAI ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...