×

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: மனைவியிடம் போலீசார் விசாரணை

திருப்போரூர்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தை சேர்ந்த சரவணக்குமார் (26). ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவர், மனைவி சீமா உடன் திருப்போரூர், கிழக்கு மாடவீதியில் வாடகை வீட்டில் குடியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், சரவணக்குமார் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பூட்டியிருந்த சரவணக்குமார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தூக்கில் தொங்கிய நிலையில் சரவணக்குமார் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரணையில், இறந்த சரவணகுமார், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சீமாவும், கடந்த 2019ம் ஆண்டு, இருவர் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சீமா, திருமணமாகி 4 ஆண்டுகளாகி சொந்த ஊருக்கு அழைத்துச்சென்று உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு சரவணக்குமார் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். இதனால், கோபித்துக்கொண்டு சீமா தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த சரவணக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. சரவணக்குமாரின் சகோதரி மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: மனைவியிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Saravanakumar ,Vlathikulam, Tuticorin District ,Seema ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலில்...