×

சவால்களை சமாளித்து சாதிப்போம்…: பயிற்சியாளர் ஃபுல்டன் நம்பிக்கை

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி சவால்களை சமாளித்து சாதிக்கும் என்று பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஸ்பெயின் ஹாக்கி சங்கத்தின் நூற்றாண்டு விழா அழைப்பு ஹாக்கி போட்டியில் பங்கேற்ற இந்திய அணி நேற்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தது. ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியின் வாய்ப்புகள் குறித்து கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், தலைமை பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் ஆகியோர் எழும்பூர் ஹாக்கி அரங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்பெயினிலிருந்து நேராக சென்னை தான் வந்திருக்கிறோம்.

அடுத்தடுத்து போட்டிகள் நடப்பது நல்லது தான். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். காரணம் இன்னும் சில வாரங்களில் ஆசிய விளையாட்டு போட்டி தொடங்க உள்ளது. எனவே அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு எங்களை தயார் செய்து கொள்ள உதவியாக இருக்கும்.

சென்னையில் நடக்க உள்ள தொடரை பொறுத்தவரையில் ஒவ்வொரு அணியையும் நாங்கள் சவாலாகவே நினைக்கிறோம். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. உள்ளூரில் விளையாடுவதால் எங்களுக்கு சாதிக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது. அதை நிச்சயம் சமாளிப்போம். பெனால்டி கார்னர் விதிகள் புதிதாக மாற்றப்பட்டு இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்ன விதிகள் இருக்கிறதோ அதன்படி விளையாடுவோம். தமிழக வீரர் கார்த்திக் செல்வத்திற்கு இது சொந்த களம் என்பதால் அவரிடமிருந்து மேலும் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக தயாராகி உள்ளது .எனவே இந்த போட்டியில் நிச்சயம் சாதிப்போம். இந்திய ரசிகர்கள் மனநிறைவு கொள்ளும் வகையில் விளையாடுவோம்.

The post சவால்களை சமாளித்து சாதிப்போம்…: பயிற்சியாளர் ஃபுல்டன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Coach ,Fulton ,Chennai ,Craig Fulton ,Asian Champions Trophy hockey ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...