×

லேண்ட் ரோவர் வெலார் எஸ்யுவி

லேண்ட் ரோவர் நிறுவனம், லேண்ட் ரோவர் வெலார் எஸ்யுவியின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. உயர் அம்சங்கள் கொண்ட எச்எஸ்இ டைனமிக் எஸ்யுவியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. புதிய கிரில் வடிவமைப்பு, பம்பர், ஹெட்லைட், டெயில் லைட் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டு தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால், மெட்டாலிக் வெரசைன் புளூ மற்றும் பிரீமியம் மெட்டாலிக் ஜடார் கிரே என்ற இரண்டு புதிய வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

காரின் உள்பகுதியை பொறுத்தவரை, முன்பு 3 டிஸ்பிளே அமைக்கப்பட்டிருந்தது. மேம்படுத்தப்பட்ட மாடலில் இரண்டு டிஸ்பிளே மட்டும் இடம் பெற்றுள்ளன. இதில் 11.4 அங்குல தொடுதிரையுடன் இடம்பெற்றுள்ள இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு டிஸ்பிளே 12.3 அங்குலம் கொண்ட டிரைவர் டிஸ்பிளேயாகும். இதில் நேவிகேஷன் வசதி உண்டு. வயர்லெஸ் சார்ஜிங், 1300 வாட்ஸ் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் கேபின் ஏர் பியூரிபையர், மசாஜ் வசதி கொண்ட முன்புற சீட்கள் இடம்பெற்றுள்ளன. சாலைக்கேற்ப செயல்படும் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பும் இந்தக் காரில் உள்ளது.

இன்ஜின்களைப் பொறுத்தவரை, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் இரண்டுமே 2.0 லிட்டர் திறன் கொண்டவை. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 250 பிஎஸ் பவரையும், 365 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 204 பிஎஸ் பவரையும் 420 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்தக்கார் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, வால்வோ எக்ஸ்சி90 மற்றும் ஆடி யூ7 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post லேண்ட் ரோவர் வெலார் எஸ்யுவி appeared first on Dinakaran.

Tags : Land Rover ,HSE ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!