×

ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை செய்ய ஒன்றிய அரசை அணுக வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை செய்ய ஒன்றிய அரசை அணுக வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்த்தியியுள்ளது. பொதுப்படையாக தெரிவித்ததால் ஒன்றிய அரசை அணுகி நிவாரணம் பெற்றுகொள்ளலாம் தேடிகொள்ளலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர், திரைபடங்களை தணிக்கை செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெட்பிளிக்ஸ், அமேசான் ஃப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப்தொடருக்கும் தணிக்கை இல்லை. பிறமொழிகளிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படும் வசனங்களிலும் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஓடிடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் கடுமையான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, எந்த வெப்தொடர் என குறிப்பிடாமல் பொதுப்படையாக கூறுவதால் சம்மந்தப்பட்ட சட்ட அமைப்பை அணுக அறிவுறுத்தினார்.

The post ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை செய்ய ஒன்றிய அரசை அணுக வேண்டும்: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : HC CHENNAI ,High Court ,Union Government ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...