புனே: திலக் நினைவு மந்திர் அறக்கட்டளை சார்பில் லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. லோக்மான்ய திலக் விருதுடன் கிடைத்த பரிசுத்தொகையை நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்குகிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்களுக்கு திலக் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி லோக்மான்ய திலகரின் நினைவு நாளில் விருது வழங்கப்படுகிறது. லோக்மான்ய திலக் தேசிய விருதை பெறும் 41வது நபர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
The post திலக் நினைவு மந்திர் அறக்கட்டளை சார்பில் லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது..!! appeared first on Dinakaran.