×

‘தகைசால் தமிழர்’ விருதுக்காக தேர்வாகியுள்ள தி.க.தலைவர் கி.வீரமணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்

சென்னை: 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்காக தேர்வாகியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும்,திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. “தகைசால் தமிழர்”விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர். கி. வீரமணிக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்காக தேர்வாகியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். இதையடுத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இவ்விருதை திராவிட இயக்கத்துக்கு அளிக்கப்பட்ட விருதாக பார்க்கிறேன். தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வானது இன்ப அதிர்ச்சி செய்தியாக இருந்தது என்றார்.

The post ‘தகைசால் தமிழர்’ விருதுக்காக தேர்வாகியுள்ள தி.க.தலைவர் கி.வீரமணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் appeared first on Dinakaran.

Tags : Tagaisal Tamil Nadu ,G.K. ,President ,K.M. Veeramani ,Chief Minister Mu.C. G.K. Meet Stalin ,Chennai ,Dravidar Club ,Tamil Nadu Government ,Veeramani ,Leadership Secretariat ,Chief Minister ,Mu.C. ,G.K. Stalin ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்