×

பல்கேரியா இளம் பெண் மீதான கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனம்: தலைநகர் சோஃபியாவில் ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

பல்கேரியா: பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வலியுறுத்தி பல்கேரியாவில் பெண்கள், ஆர்வலர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் ஸ்டாரா, ஜபோரா நகரில் இளம்பெண் ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இளைஞர் ஒருவர் தனது காதலியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த பெண்ணுக்கு 400 தெயல்கள் போடும் அளவிற்கு கொடூரமாக அவர் தாக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து திரண்டுவந்த மக்கள் தலைநகர் சோஃபியாவில் போராட்டத்தில் குதித்தனர்.

நீதிமன்ற கட்டடத்திற்கு வெளியே குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கேரியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். பல்கேரியாவில் உள்ள பெண்களில் 3ல் ஒரு பகுதியினர் உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக தேசிய புள்ளியியல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பல்கேரியா இளம் பெண் மீதான கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனம்: தலைநகர் சோஃபியாவில் ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Bulgaria ,Sofia Bulgaria ,Stara ,Jabora ,Sofia ,Dinakaran ,
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் சின்னர் சாம்பியன்