- ஆதித்தரோட்டம்
- அழகிய கோயில் கோவிந்தம்,
- கோவிந்தா
- மதுரை
- கல்லுதக்கலை
- ஆடிப் புளுண்டிகிருவிய திருவிழா
- ஆதித்தரோட்டம்
- அழகு கோயில் கோவிந்தா,
மதுரை : ஆடிப் பெருந்திருவிழாவை ஒட்டி புகழ்பெற்ற கள்ளழகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கள்ளழகர் கோவிலில் கடந்த 24ம் தேதி ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9ம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. 60 அடி உயரம் கொண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர ராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவிந்தா.. கோவிந்தா என முழக்கம் எழுப்பியபடி பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
4 மாட வீதிகள் வழியாக மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி, தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் மதுரை மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கள்ளழகர் தேரோட்டத்தை ஒட்டி சுமார் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேரோட்டத்தைத் தொடர்ந்து மாலை 18ம் படி கருப்பண்ண நிலை கதவுகள் திறக்கப்பட்டு சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற உள்ளது.
The post அழகர் கோவிலில் ஆடித்தேரோட்டம்.. ஆட்டம் பாட்டத்துடன் 4 மாட வீதிகளில் தேர் உலா… கோவிந்தா, கோவிந்தா என பக்தர்கள் முழக்கம்!! appeared first on Dinakaran.