×

காமராஜபுரம் அருகே மலைக்கிராமத்தில் புதிய தடுப்பணையை சீரமைக்கும் பணி தீவிரம்

வருசநாடு, ஆக. 1: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் மதிப்பில் பாலசுப்ரமணியபுரம் ஓடையின் குறுக்கே இரு இடங்களில் புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டனர். இந்நிலையில் சமீபத்தில் மலைப்பகுதியில் பெய்த கன மழையால் ஓடையில் நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் புதிய தடுப்பணைகளில் நீர் விழும் இடத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக மண்ணரிப்பை தடுக்கும் வகையில் இரு தடுப்பணைகளிலும் நீர் விழும் இடத்தில் சிமென்ட் கான்கிரீட் கலவை மூலம் பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மயிலாடும்பாறை ஒன்றிய அதிகாரிகள் புதிய தடுப்பணைகளில் சீரமைப்பு செய்யும் பகுதிகளில் ஆய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

The post காமராஜபுரம் அருகே மலைக்கிராமத்தில் புதிய தடுப்பணையை சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kamarajapuram ,Varusanadu ,Tummakundu ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவில் பொதுமக்கள்...