×

கலெக்டர் அலுவலகத்தில் மனு

விருதுநகர், ஆக.1: பாதையை ஆக்கிரமிப்பு செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்.விருதுநகர் பட்டம்புதூர் அருந்ததியர் புதுக்காலனி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகாரில், அருந்ததியர் தெருவில் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அவரது காட்டிற்கு செல்வதற்கு காலனி தெரு பாதையை பயன்படுத்துவது, காட்டிற்கான பாதை தெருவில் இருப்பதாக கூறி தகராறு செய்து வருகிறார்.

மேலும் பாதையை அளந்து கொடுக்குமாறு மனு கொடுத்துள்ளார். அவர் தொடர்ந்து பிரச்சனை செய்ததால் வச்சக்காரப்பட்டி காவல்நிலையத்தில் சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் காலனி வழியாக பட்டா உள்ள இடத்தில் பாதை தர வேண்டுமென நபர்களை அனுப்பி மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Pattambudur Arunthathiyar Pudukalani ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...