×

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

 

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நேற்று முதல் வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிந்தது. கடந்த மே 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, 3 உண்டி உறைவிட மேல்நிலைப், 1 சமூக நலத்துறையின் மேல்நிலைப்பள்ளி, 5 சுய நிதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 179 பள்ளிகளை சேர்ந்த 19,488 பேர் தோ்வு எழுதினர். இதில், 18,068 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 92.72 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

The post பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 16,816 பேர் விண்ணப்பம்