×

வெவ்வேறு இடங்களில் இரு பைக்குகள் மாயம்

 

தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த துரைராஜன் என்பவரின் மகன் சீனிவாசன் இவர் கடந்த 17ம் தேதி தெற்கு வீதியில் உள்ள ஒரு மெடிக்கல் முன் நிறுத்தி பைக்கை காணவில்லை என்று மேற்கு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.இதேபோல் தஞ்சை கீழவாசலை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் ஆரோக்கிய செபாஸ்டின் (40). இவர் கடந்த 28ம் தேதி கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு நிறுத்தியிருந்த தனது பைக்கை காணவில்லை கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

 

The post வெவ்வேறு இடங்களில் இரு பைக்குகள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Srinivasan ,Durairajan ,Thanjavur Medical College Road ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...